கரூர் : கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் சேர்ந்த கலாராணி, (55), நேற்று முன்தினம், தன் இரு சக்கர வாகனத்தில், கரூர் மணப்பாறை சாலை லிங்கத்துார் பேருந்து நிலையத்தில்,அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது, இவரது
வாகனத்தில் மீது அரசு பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்தில் இறந்தார். வெள்ளி யணை காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.