தர்மபுரி : தர்மபுரி அருகே தூதரையன் கொட்டாய் பகுதியை, சேர்ந்தவர் ராஜம்மாள் (67), இவர் செம்மாண்டகுப்பத்தில் உள்ள உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு, சென்றார். பின்னர் வீட்டிற்கு பேருந்தில், திரும்பினார். தூதரையன் கொட்டாய் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில், இருந்து இறங்கிய போது அவருடைய கழுத்தில், இருந்த 5 பவுன் நகை மாயமாகி இருந்தது.
மர்மநபர் ராஜம்மாள் அணிந்து இருந்து நகையை அபேஸ் செய்து இருந்தது தெரிய வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜம்மாள், மதிகோன்பாளையம் காவல் நிலையத்தில், புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து ஓடும் பேருந்தில், நகை பறித்தவர் குறித்து, விசாரணை நடத்தினர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.