விருதுநகர் : விருதுநகர் உச்சநீதிமன்றம் தீர்ப்பு படி, பேரியம் உப்பு கலந்து தயார், செய்யப்பட்ட பட்டாசுகள், சரவெடிகள் தயாரித்தல், விற்பனை செய்தல் தடுக்கும் பொருட்டு, தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என மாவட்ட ஆட்சியர் திரு. மேகநாதரெட்டி, எச்சரிக்கை விடுத்தார். மேலும் அவர் கூறியதாவது, மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் பேரியம், உப்பு கலந்து தயார் செய்யப்பட்ட , பட்டாசுகள், சரவெடிகள் தயாரித்தல், சேமித்து வைத்தல், விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளைத், தடுக்கும் பொருட்டு வருவாய்த்துறை, காவல் துறை, தீயணைப்பு, தொழிலகப் பாதுகாப்பு துறைகளை, உள்ளடக்கிய ஆய்வுக் குழுக்கள், தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் சிறிய அளவிலான விதிமீறல்கள், கண்டறியப்பட்ட விதத்தில் 405 பட்டாசு ஆலைகளுக்கு, விளக்கம் கேட்கும் குறிப்பாணைகள் வழங்கப்பட்டும், அதிகளவிலான விதிமீறல்கள் கண்டறியப்பட்ட , 174 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இடைநிறுத்தம் செய்யப்பட்ட காரணத்தால் தொடர்ச்சியாக உற்பத்திப் பணிகள், ஏதும் இல்லாததால் ஆலைகளில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம், பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின் தற்காலிக இடைநிறுத்த ஆணைகள் விலக்கி ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் காலங்களிலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறினால், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி