கோவை : கோவை வடவள்ளி, அருகே உள்ள பழனிக்கவுண்டன் புதூரை சேர்ந்தவர் பரமசிவம் ,போட்டோகிராபர். இவரது மகள் பிரதிக்ஷா (16), கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில், 10-ம் வகுப்பு படித்து வந்தார்.. பெற்றோர்கள் நேற்று வேலைக்கு சென்று விட்டனர் .அப்போதுவீட்டில் தனியாக இருந்த, பிரதிக்ஷா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார், அதில் தனது பெற்றோர்கள் அடிக்கடி தன்னை திட்டுவதாக கூறியிருந்தார். காவல் துறையினர், விசாரணையில் மாணவி காந்தி பார்க் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், பெற்றோர்கள் இதை கண்டித்ததால், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வடவள்ளி காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/gokul.png)