தேனி : பெரியகுளத்தில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் தீக்காயம் அடைந்தவரை, சேர்க்க சென்றனர். அப்போது சிகிச்சை அளிக்க, மறுப்பதாக கூறி பொதுமக்கள் திடீரென சாலை மறியல் செய்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், போராட்டம் நடத்தியவர்களுடன் பேசினர். இதன் பின்பு சமரசம் ஏற்பட்டது.