பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாண்டியன் (58), எலக்ட்ரீசியன். இவருடைய வீட்டிற்கு கடந்த 8-ந்தேதி அதிகாலை 2.30 மணியளவில் , வந்த 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் கதவின் உள்தாழ்ப்பாளை உடைத்து கொண்டு, வீட்டிற்குள் புகுந்தது. பின்னர் அவர்கள் தரைத்தளத்தில் தூங்கிக்கொண்டிருந்த, பாண்டியனை இரும்பு கம்பியால் தாக்கி நகை, பணம் கேட்டு மிரட்டினர். இந்த சத்தத்தை கேட்டு மாடியில் தூங்கிக்கொண்டிருந்த அவருடைய மகள் ரம்யா (32), எழுந்து கீழே வந்தார். அப்போது முகமூடி கும்பல், அவர் அணிந்திருந்த 3 பவுன் தாலி சங்கிலி, ¾ பவுன் மோதிரம் ஆகியவற்றை பறித்தனர்.
பின்னர் வீட்டில் பணம் ஏதும் இல்லாததால், கார் சாவியை பறித்து விட்டு வீட்டின் கதவை வெளிப்புறமாக தாழ்பாளிட்டு, வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை எடுத்துக்கொண்டு அதில் தப்பி சென்றனர். பெரம்பலூர் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில், ஈடுபட்ட முகமூடி கும்பலை பிடிக்க மாவட்ட காவலர் திரு. மணி ,உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள், அமைக்கப்பட்டன. அவர்கள் முகமூடி கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில், ஈடுபட்டு வந்தனர்.
முகமூடி கும்பல் தப்பி சென்ற கார் சென்னை ஆர்.கே.நகரில் நிற்பதும், இந்த கொள்ளை சம்பவத்தில், மொத்தம் 9 பேர் கூட்டாக ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் , சிறுவாச்சூரில் நேற்று அதிகாலை , வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகம்படும்படியாக, காரில் வந்து கொண்டிருந்த 5 பேரை தனிப்படை காவல் ஆய்வாளர்கள் திரு. மணிகண்டன், திரு. ராம்குமார், பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், அவர்களை அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் பெரம்பலூர்-ஆலம்பாடி ரோடு சமத்துவபுரத்தை சேர்ந்த சுப்ரமணியன் (48), சிவகங்கை மாவட்டம் வேளாங்குளம் முருகன், கோவில் தெருவை சேர்ந்த கருப்புசாமி மகன் சூர்யா (23), வேளாங்குளத்தை சேர்ந்த ரஞ்சித் (25), மதுரை மாவட்டம் வரிச்சூர் அருகே உரங்கன்பட்டியை சேர்ந்த அழகர்பாண்டியன் (32), சென்னை பெருங்குடி அம்பேத்கர் புரட்சி, நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த பிரசாந்த் (26), என்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட, சுப்ரமணியன், சூர்யா, ரஞ்சித், அழகர் பாண்டியனை காவல் துறையினரை, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில், ஈடுபட்ட மற்றவர்களையும் பிடிக்க தனிப்படை, விரைந்துள்ளனர்.