பெரம்பலூர் : பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிமேகலா தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் கொளஞ்சி வாசு, பொருளாளர் மருதம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமரிஆனந்தன், சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் பொன்ஆனந்தராசு ஆகியோர் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினர். இதில் சிறப்பு காலமுறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்கவேண்டும்.
கேஸ் சிலிண்டர் தேவைக்கு ஏற்ப அரசே வழங்கவேண்டும், சமையல் உதவியாளர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கவேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவூட்டும் செலவினம் ரூ.5 ஆக உயர்த்தி வழங்கவேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும், தகுதி உள்ள அனைவருக்கும் கல்வி தகுதியின் அடிப்படையில் அரசுத்துறையில் பதவி உயர்வு வழங்கவேண்டும், மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்கவேண்டும், ஆண் சத்துணவு ஊழியர்களக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும், வேலைநிறுத்த காலத்திற்கான ஊதியம் வழங்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.