அரியலூர் : அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார்வெட்டு, தெற்குத் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (38), இவருக்கும் இதே கிராமத்தில், உள்ள இந்திரா காலனி தெருவைச் சேர்ந்த, ஆனந்தின் மனைவி கன்னியம்மாள் (33), என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாக, கூறப்படுகிறது. இதனால் மணிகண்டனின் மனைவி இளவரசி (34), பலமுறை கன்னியம்மாளை கண்டித்ததாக, தெரிகிறது. இந்நிலையில் மணிகண்டனின், சகோதரிகள் அரங்கநாயகி (26), அன்பரசி ஆகியோர் கன்னியம்மாளின் செல்போனுக்கு, தொடர்பு கொண்டு கண்டித்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை மணிகண்டன், இளவரசி, அரங்கநாயகி, அன்பரசி, ஆகியோர் கன்னியம்மாள், வீட்டிற்கு சென்று, கன்னியம்மாளை தாக்கியதாக தெரிகிறது. இதில் கன்னியம்மாள் பலத்த, காயமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கன்னியம்மாளை, மீட்டு அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து கன்னியம்மாள் கொடுத்த புகாரின்பேரில், மணிகண்டன், இளவரசி உள்பட 4 பேர் மீதும், மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் திரு. பாண்டியன், வழக்குப்பதிவு செய்து விசாரணை, நடத்தி வருகின்றார்.