கோவை : கோவை ரெயில் நிலையத்திற்க்கு, இன்று காலை 10 மணியளவில் டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தடைந்தது. இந்த ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமதி. சிவகாமி ராணி, மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியின், சீட்டிற்க்கு அடியில் 63 கிலோ கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சுசில் முண்டா, என்பவரிட, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்