திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய பெண் உட்பட இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் வழக்கில் தொடர்புடைய சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த திவாகர்(27), மற்றும் கம்பம் பகுதியை சேர்ந்த பிரியா (எ) சுகப்பிரியா(36) ஆகிய 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி.சீனிவாசன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் விசாகன், இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து கன்னிவாடி காவல் நிலைய போலீசார் திவாகர் மற்றும் பிரியா (எ) சுகப்பிரியா ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.