மதுரை : திருமங்கலம், சாத்தங்குடியைச் சேர்ந்த தங்கவேலு மனைவி பாண்டியம்மாள் (40), கணவரை பிரிந்து மகளுடன் வசித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த முத்தையா என்பவருடன் பழகியுள்ளார். இதை முத்தையா மகன் பாலமுருகன் கண்டித்துள்ளார். ஆனால் பழக்கத்தை விடாததால், நேற்று பாண்டியம்மாளை பாலமுருகன் கத்தியால் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாலமுருகனை கைது செய்து திருமங்கலம் தாலுகாகாவல் துறையினர், விசாரிக்கின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி