திருச்சி : திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றது முதல் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், வழிப்பறி செய்யும் குற்றவாளிகளை கண்டறிந்தும், சமூக விரோத செயல்களில், ஈடுபடும் குற்றவாளிகள், பெண்களை வைத்து விபசாரம் செய்யும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க, திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், வடக்கு மற்றும் தெற்கு, சரக உதவி ஆணையர்கள், மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு, உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள்.
கடந்த 12.04.22-ந்தேதி EB ரோட்டில் , உள்ள ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக ஒருவர் கொடுத்த புகாரின்பேரில், சம்மந்தப்பட்ட வீட்டை சோதனை செய்தபோது, எதிரிகள் கதிர்வேல், மற்றும் ராணி, ஆகியோர்கள் 4 இளம் பெண்களை, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. உடனே எதிரிகளை கைது செய்து, வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு, அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி எதிரிகள் கதிர்வேல், மற்றும் ராணி, ஆகியோர்கள் தொடர்ந்து இளம்பெண்களின் வறுமையை பயன்படுத்தி விபசாரத்தில், ஈடுப்படுத்துவர்கள், சமூக விரோதசெயல்கள் புரிபவர்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுபர்கள் என விசாரணையில், தெரிய வருவதாலும், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை, தடுக்கும் பொருட்டு கோட்டை காவல் ஆய்வாளர், கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் மேற்படி எதிரிகளை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள, எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம், ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அடைக்கப்பட்டனார்.