திருவள்ளூர் : பொன்னேரி L.N.G கல்லூரியில், விஜய கீதம் அறக்கட்டளை சார்பில், ”எழுந்து வா பெண்ணே” என்ற தலைப்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு, நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி காலங்களில் உளவியல் மாற்றங்கள், பெண்களுக்கு ஏற்படும், உடல் ரீதியான பிரச்சனைகள், மனவலிமை பிரச்சனைகளை, சமாளிப்பது எப்படி பெற்றோர்கள், பேராசிரியர்களிடம், எப்படி நடந்து கொள்ள வேண்டும், மன ரீதியான சிந்தனைகள், படிப்பில் தனி கவனம், செலுத்துவது எப்படி, வாழ்வில் வெற்றி பெற வழி தொழில்ரீதியான, அணுகுமுறைகள் பெண்களின் பாதுகாப்பு குறித்து, அரசின் வழிமுறைகள், போக்சோ சட்டங்கள், உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை பேராசிரியர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள் உளவியல் நிபுணர்கள்,சிறப்பு விருந்தினர்கள் எடுத்துரைத்தனர்.
இதில் விஜய் கீதம், அறக்கட்டளையின் நிறுவனர் கீதா சரவணன் சிறப்பு அழைப்பாளர்கள், திருவள்ளூர் மாவட்ட தொழில் மைய பொது, மேலாளர் மணிவண்ணன், பொன்னேரி அரசு மருத்துவமனை, முதன்மை மருத்துவர் திரு. அனு ரத்னா டி. ஜே.எஸ் கல்வி குழும இயக்குனர், திரு. கபிலன் கல்லூரி முதல்வர் திரு.சேகர், அம்பத்தூர் அணைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திருமதி. ஜோதிலட்சுமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு. அதிகாரி நிஷாந்தினி, குழந்தைகள் நல்வாழ்வு அமைப்பில் சேர்மன் ஆக்சியா, மத்திய புழல் சிறை விஜிலன்ஸ், சாருமதி புழல் சிறை மனோதத்துவ, நிபுணர் வனிதா விஜய கீதம் உதவி ஆர்கனிசர் ஹர்ஷினி ஓம் சரவணன் செயலாளர் ஓம் சரவணன் மற்றும் கல்லூரி மாணவிகள் பேராசிரியர்கள் நிகழ்ச்சி, உதவியாளர்கள் உட்பட, ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்