விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள செல்லையாபுரம் பகுதியில், டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடையின் மேற்பார்வையாளராக, ஆலங்குளத்தைச் சேர்ந்த சேகர், விற்பனையாளராக திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த பாபு வேலை பார்த்து வருகின்றனர். வழக்கம் போல நேற்று இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்றனர்.காலையில் கடைக்கு வந்த பாபு, மதுக்கடை கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக இது குறித்து வெம்பக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற காவல் துறையினர், டாஸ்மாக் கடைக்குள் சென்று பார்வையிட்டு, விற்பனையாளர் பாபுவிடம் விவரம் கேட்டனர். மதுக்கடையில் வைக்கப்பட்டிருந்த, சுமார் 18 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களும், கடை மேஜையில் இருந்த 2 ஆயிரத்து 500 ரூபாய் பணமும் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து வழக்குபதிவு செய்த காவல் துறையினர், மது பாட்டில்களை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை, தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி