அரியலூர் : அரியலூர் புதுமார்க்கெட் தெருவை சேர்ந்தவர் கோபிநாத் மனைவி சுமதி (46). இவர் நேற்று முன்தினம் மாலை கயர்லாபாத் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மழை பெய்ததால் அங்கேயே தங்கி விட்டு நேற்று காலை வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த சங்கிலி, தோடு உள்ளிட்ட 18½ பவுன் நகைகள் திருடு போயிருப்பது, தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சுமதி அளித்த புகாரின் பேரில் கயர்லாபாத் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.