தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய ரவுடி கைது – ரூபாய் 80,000/- மதிப்புள்ள 2½ பவுன் தங்க நகைகள் மீட்பு.
கடந்த 20.03.2022 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குரங்கணி, இரண்டாம் பண்ணைவிளை பகுதியை சேர்ந்த பொன்னுலிங்கம் என்பவரது மனைவி மாரியம்மாள் (55) வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர் பீரோவில் இருந்த சுமார் 2 பவுன் தங்க செயின் மற்றும் ½ பவுன் கம்மல் ஆகியவற்றை திருடி சென்றுள்ளதாக மேற்படி மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்hகணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் எதிரிகளை விரைந்து கண்டுபிடித்து திருடுபோன நகைகளை மீட்க ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண் காணிப்பாளர் வெங்கடேசன் அவர்களுக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் முகம்மது பைசல் மற்றும் போலீசார் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சேதுக்குவாய்த்தான் பகுதியை சேர்ந்த விஜயராஜ் மகன் சந்தியாமுகேஷ் (எ) சதீஷ் (22) என்பவர் மேற்படி மாரியம்மாள் என்பரது வீட்டில் தங்க நகைகளை திருடியது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரி சந்தியாமுகேஷ் (எ) சதீஷ் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 80,000/- மதிப்புள்ள 2½ பவுன் தங்க நகைகளை மீட்டனர். மேலும் எதிரி சந்தியாமுகேஷ் (எ) சதீஷ் மீது ஏற்கனவே குரும்பூர் காவல் நிலையத்தில் திருட்டு, கொலை மிரட்டல் உட்பட 6 வழக்குகளும், ஆழ்வார்திருநகரி காவல் நிலை யத்தில் ஒரு வழிப்பறி வழக்கும், விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் ஓரு வழிப்பறி வழக்கும் என மொத்தம் 8 வழக்குகள் உள்ளது குறிப்படத்தக்கது.