கோவை: கோவை சாய்பாபா காலனி, வெங்கிட்டாபுரம், பாபா வீதியைச் சேர்ந்தவர் ஜான்சன் ( 57), செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 16-ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று விட்டார். நேற்று அவரது வீட்டில் இருந்து புகை வந்தது. இதை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். இதில் வீட்டில் உள்ள ஏராளமான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. சேத மதிப்பு ரூ 1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து ஜான்சன் சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.