திருச்சி: பூட்டியிருக்கும் வீடுகளை குறிவைத்து திருடிய திருடனை கைது செய்து சிறையில் அடைத்த திருச்சி மாவட்ட காவல் துறையினர் திருச்சி மாவட்டம் வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பூட்டியிருக்கும் வீடுகளை மட்டும் குறிவைத்து நான்கு இடங்களில் தொடர் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. புகார்தாரர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித் குமார் இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி, மணப்பாறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.ஜனனி அவர்களின் வழிகாட்டுதலின் படி திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை பிடிப்பதற்கு தலைமைக் காவலர் திரு.இளங்கோ, நாராயணன் காவலர் திரு. குணா ஆகியோர் மூலம் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் CCTV களை ஆய்வு செய்தபோது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவன் திண்டுக்கல் மாவட்ட சேர்ந்த கருணாகரன் என்பது தெரியவந்தது.அதனடிப்படையில் 17.03.2022 நேற்று கருணாகரன் என்பவனை கைது செய்து அவனிடம் இருந்து 19 சவரன் தங்க நகைகள், பஜாஜ் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தையும் தனிப் படையினர் கைப்பற்றினர். அதன்பிறகு கருணாகரன் என்பவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.