சென்னை : பெசன்ட்நகர் பகுதியில் அபாயகரமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி சாகசம் செய்த சரவணன் என்பவர், அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் குழுவினரால் கைது. இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பறிமுதல். இருசக்கர வாகனத்தில் ரேஸ் மற்றும் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என சென்னை பெருநகர காவல் துறை எச்சரிக்கை. Adyar Traffic Investigation Wing Police arrested Saravanan for involving in bike stunt. Two wheeler and mobile phone were seized. Greater Chennai Police warned that stringent action will continue against persons who involve in racing and bike stunts. சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டும் நபர்களையும், பைக் ரேஸ் என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டுதல் மற்றும் சாகசத்தில் ஈடுபடும் நபர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், முக்கிய இடங்களில் காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, இன்று (25.03.2022) காலை, பெசன்ட்நகர், பெசன்ட் அவென்யூ, தியோசாபிகல் சொசைட்டி அருகில் ஒரு நபர் அதிவேகமாகவும், வீலிங் என்ற பெயரில் சாகசம் செய்வதாகவும், அவ்வழியே நடைபயிற்சிக்காக சென்று கொண்டிருந்த வினோத்குமார் என்பவர் காவல் கட்டுப்பாட்டறைக்கு கொடுத்த தகவலின்பேரில், அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் யமஹா R15 இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், பிடிபட்ட நபர் சரவணன் (வ/19) பெசன்ட்நகர் என்பதும், தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு இளங்கலை படித்து வருவதும், சரவணன் காலை மேற்படி இடத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்வதும், மீண்டும் வந்து வீலிங் செய்ததும் தெரியவந்தது. அதன்பேரில், அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவில் வழக்குப் பதிவு செய்து, பிடிபட்ட சரவணனை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய மேற்படி யமஹா R15 இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.