தமிழகத்தை கடந்த 15.11.18ம் தேதி இரவு தாக்கிய கஜா புயல் சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களை தாக்கியது. இப்புயலின் போது சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இப்புயலினால் கன மழை பெய்து 400க்கும் அதிகமான மரங்கள் மற்றும் 150க்கும் அதிகமான மின்கம்பங்கள் சாலைகளில் சாய்ந்து மக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகினர்.
புயலில் சிக்கிய மக்களை மீட்பதற்காக அமைக்கப்பட்ட காவல் ஆய்வாளர் தலைமையிலான 55 பேரிடர் மீட்புக்குழுவினர் மழையென்றும் பாராமல் சாய்ந்த மரங்கள்¸ மின் கம்பங்கள்¸ சாலைகளில் ஏற்பட்ட நில சரிவுகளை சீர் செய்து புயலில் சிக்கிய மக்களை மீட்டனர். பின்னர் அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு உதவி செய்து அப்பகுதியை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தனர்.