கோவை : கோவை போத்தனூர் வெள்ளலூர் ரோட்டில் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தின் கேட்டில் உண்டியல் பொருத்தப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் யாரோ மர்ம ஆசாமிகள் அந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் ரூ 5 ஆயிரத்தைதிருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி ரோஜோ போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்