கடலூர்: கடலூர் மாவட்ட தலைமையிடத்து புதிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மதிவாணன் நேற்று பொறுப்பேற்றார். இதற்கு முன்பு இவர் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். இதேபோல் இதற்கு முன்பு கடலூர் மாவட்ட தலைமையிடத்து கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராமசாமி நாமக்கல் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
புதிதாக பொறுப்பேற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மதிவாணனுக்கு துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினர் வாழ்த்து தெரிவித்தனர்.