திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 198 இரண்டாம் நிலைக் காவலர்களின் பயிற்சி துவக்க நாள் நிகழ்ச்சி இன்று (14.03.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி முதல் நாள் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார்கள்.
முதல் நபராக அறிக்கை செய்த பயிற்சி காவலர் (RPC 21) திரு.செல்வராஜ் அவர்களுக்கு ரூ.500 வெகுமதி வழங்கி பாராட்டினார்கள். மேலும் பயிற்சி பெறும் காவலர்களுக்கு தேவையான உடைமைகளை வழங்கினார்கள். காவலர்கள் பயிற்சி காலங்களில் நன்னடத்தையுடன் செயல்படும் படியும், பயிற்சியினை சிறப்பாக மேற்கொள்ளும் படியும் அறிவுரை கூறினார்கள்.