சென்னை : சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், பா.ஜ.க. பிரமுகர் பாலச்சந்தர், கடந்த மே மாதம் 24-ந் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், சிந்தாதிரிப்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் காலனியை சேர்ந்த பிரதீப் (26), அவரது சகோதரர் சஞ்சய் (24), கலைராஜ் (28), ஜோதி கணேஷ் (30), புளிமூட்டை தினேஷ் (23), ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில், உள்ளது. இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் திரு . சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில் இவர்கள் 5 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அரசு வேலைவாங்கி தருவதாக மோசடியில், ஈடுபட்ட புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த ஜோதிகுமார் (34), வழிப்பறி வழக்கில் கைதான பல்லாவரம் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (32), போலி கன்டெய்னர் நிறுவனங்கள் நடத்தி மோசடியில், ஈடுபட்ட பல்லாவரத்தை சேர்ந்த ஜான் சாலமோன் (30), போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கிய பாலசுப்பிரமணியன் (55), ஆகிய 4 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரையில், 180 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில், அடைக்கப்பட்டுள்ளனர். திருந்தி வாழப் போவதாக உறுதிமொழி அளித்துவிட்டு மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில், அடைக்கப்பட்டனர்.