கோவை : கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் ரோட்டில், உள்ள பா.ஜ.க .அலுவலகம் அருகே அனுமதி இல்லாமல் பிளக்ஸ் போர்டு, வைக்கப்பட்டு இருந்தது. மேலும் பட்டாசு வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து காட்டூர் காவல்துறையில், புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர், இது தொடர்பாக பா.ஜ.க நிர்வாகி சுதாகர் துரை, மோகன்ராஜ் , கோபிநாத், ராமச்சந்திரன், அர்ஜுன், ஜோதி ,சுந்தர் ராஜ், ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்