கோவை : பாரதிய ஜனதா கட்சியின், சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், இவர் நேற்று கோவை போத்தனூர், வெள்ளலூர் ரோட்டில் உள்ள ஒரு கிறிஸ்தவ, ஆலய நிர்வாகிகள் பணியிடை நீக்கபட்ட, சம்பவம் குறித்து கேட்பதற்காக ஆதரவாளர்களுடன், சம்பந்தப்பட்ட ஆலயத்திற்குச் செல்ல முயன்றார் . இதுகுறித்து தகவல் அறிந்ததும் போத்தனூர், காவல் ஆய்வாளர் திரு. நடேசன், அவரை நஞ்சுண்டாபுரம் சோதனைச்சாவடி, அருகே தடுத்து நிறுத்தினார். ஆனால் அவர் தடையை மீறி, கிறிஸ்தவ ஆலயத்துக்கு செல்ல முயன்றார். இதனால்வேலூர் இப்ராஹிமுடன், அவருடைய ஆதரவாளர்கள், பீளமேடு காந்திமா நகர், மகாவிஷ்ணு (36), சவுரிபாளையம் ஜோசன் (45), பொள்ளாச்சி ஊஞ்சவேலம்பட்டி, பிஜு அலெக்ஸ் (33), ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் காவல்நிலை யத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
![](https://tnpolice.news/wp-content/uploads/2021/06/gokul.png)