சென்னை : சென்னை, பழைய திருமங்கலம் பகுதியில், சித்ரா (28), என்பவர் கணவருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டு பக்கத்தில் சித்ராவின் கணவருடைய தம்பி சுரேஷ்குமார், வசித்து வருகிறார். சுரேஷ்குமார் அவரது அண்ணியிடம் பாலியல் உறவுக்காக பலமுறை தொல்லை கொடுத்த நிலையில், சுரேஷ்குமார் கடந்த (04.06.2022), அன்று மதியம் மீண்டும் அவரது அண்ணியிடம்,ஆபாச செயல்கள் செய்து, நிர்வாணமாக நின்று பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார். இது குறித்து சித்ரா அவரது கணவரிடம் தெரிவித்து, பின்னர் திருமங்கலம் காவல் நிலையத்தில், புகார் கொடுத்த தின்பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டது. திருமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், சுரேஷ்குமார் பாலியல் தொல்லை கொடுத்து, ஆபாச செயல்களில், ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில், வழக்குப் பதிவு செய்து, எதிரி சுரேஷ்குமார் (39), பழைய திருமங்கலம் என்பவரை கைது செய்தனர். மேற்படி குற்றவாளி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.