மதுரை : பாலியன் வன்கொடுமைகளில், இருந்து குழந்தைகளைபாதுகாத்தல் (போக்சோ)சட்டத்தின் கீழ்வாரம் குறைந்தது இரு வழக்குகளாவது பதிவாகிறது. (2012)-ல் அமலான இச்சட்டத்தி்ன் கீழ் 18 யதிற்குட்பட்டோர், பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகும் போது சமந்தப்பட்டோரை கைதுசெய்கின்றனர். பெரும்பாலும் பள்ளி மாணவியரை காதலித்து உறவு வைத்தல், திருமண வயதை அடையாத சிறுமியை திருமணம் செய்தல் போன்றவற்றில் தான் அதிக வழக்குகள் போக்சோவில் பதிவாகின்றன. அடுத்து சிறுமிகளிடம், சில்மிஷத்தில் ஈடுபடுவது, போதையில் தவறாக நடப்பது னெ வழக்குகள் பதிவாகின்றன.
மதுரை புறநகரில் (2020 முதல் 2022) மே 23, வரை பலாத்காரம், செய்ததாக 210 வழக்குகளும், நகரி்ல 185 வழக்குகளும் பதிவாகியுள்ளன. சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புறநகரில் 97 வழக்குகளும் நகரில் 59 வழக்குகளும், பதிவாகியுள்ளன. காவல் துறையினர் , கூறியது, பாலியல்தொந்தரவுகளுக்கு ஆளாகும் சிறுமிகள்,குழந்தைகள் உடனடியாக 24 மணிநேரமும் செயல்படும் ஹெல்ப் லைன் (1098) எண் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்பு கொண்டால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் (2020-21)-ம் ஆண்டில்கொரோனா கால கட்டத்தில் அதிக புகார்கள் வந்தன என்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி