கடலூர் : கடலூர் நெல்லிக்குப்பம், ஜீவா நகரை சேர்ந்தவர் பாலாஜி (37), இவர் நெல்லிக்குப்பத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேலை, செய்து வருகிறார். இவர் பண்ருட்டியில் உள்ள ஒரு கல்வி, நிறுவனத்தில் டிப்ளமோ நர்சிங் படிப்பு படித்து வரும், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பண்ருட்டி, அனைத்து மகளிர் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து பாலாஜியை, கைது செய்தனர். தொடர்ந்து அவர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.