சென்னை : கடந்த 2018ம் ஆண்டு, சென்னை பெருநகர காவல், புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில், வசித்த 11 வயது சிறுமியிடம், அப்பகுதியில் உள்ள இரும்பு கடையில் வேலை செய்து வந்த, வடமாநில வாலிபர், பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தொடர்பாக, சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில், எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்து, சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட கோவிந்தகுமார் (20), ஜார்கண்ட் மாநிலம் என்பவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.
இவ்வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணை, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சித்ரா, (தற்போது சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்) மற்றும் நீதிமன்ற அலுவல் புரியும் தலைமைக்காவலர் திருமதி. ரேவதி. (பெ.த.கா.25194) மற்றும் காவல் குழுவினர், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக, கண்காணித்து வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை, முடிவடைந்து கடந்த (30.03.2022), இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேற்படி வழக்கில் குற்றவாளி கோவிந்தகுமார், மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி கோவிந்தகுமார் என்பவருக்கு 5 ஆண்டுகள், கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/- அபராதம் விதித்து கனம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, அவர்கள் தீர்ப்பு வழங்கினார். 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில், ஈடுபட்ட கோவிந்த குமாரை கைது செய்து, வழக்கின் விசாரணையை விரைவில், முடிக்க உதவிய காவல் ஆய்வாளர் மற்றும் பெண் தலைமைக் காவலரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (24.05.2022), நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி வழங்கினார்.