சென்னை: கோட்டூர்புரம் பகுதியில் செல்போன் திருட முயன்ற குற்றவாளியை துரத்தி பிடித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஜீவானந்தம் என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Commissioner of Police appreciated and rewarded Jeevanantham who chased and apprehended the cell phone theft accused and handed over to Kotturpuram PS. சென்னை, மத்திய கைலாஷ் பகுதியில் வசித்து வரும் கௌசல்யா (வ/49) என்பவர் கடந்த 20.03.2022 அன்று மாலை 5.00 மணியளவில் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, அங்கு வந்த நபர் ஒருவர் மேற்படி கௌசல்யா வீட்டின் ஜன்னல் வழியாக செல்போனை திருட முயன்றுள்ளார். சத்தம் கேட்டு எழுந்த கௌசல்யா கூச்சலிட செல்போன் பறிக்க முயன்ற நபர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார், உடனே சுதாரித்துக்கொண்ட கௌசல்யாவின் கணவர் ஜீவானந்தம் தப்பியோடிய நபரை துரத்திச்சென்று மடக்கிப்பிடித்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கோட்டூர்புரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் போலீசார் விசாரணையில் பிடிபட்ட நபர் முகிலரசன் (வ/24) ஜாபர்கான்பேட்டை என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் மேற்படி நபர் மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில் அடிதடி வழக்கு உள்ளதும் தெரியவந்தது. மேற்படி எதிரி மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செல்போன் திருட முயன்ற நபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த திரு.ஜீவானந்தம் என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (23.03.2022) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.