திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, கும்மிடிபூண்டி ஆகிய வட்டங்களில் 50க்கும் மேற்பட்ட தனியார் செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன, இங்கு பிற மாவட்டங்கள் மட்டுமின்றி வட மாநிலத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கு டும்பத்தினர் குறைந்த ஊதியத்தில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருகின்றனர். செங்கல் சூளை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிய குடிசைகளில் குடும்பத்துடன் வசித்து வரும் இந்தத் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆரம்பக் கல்வி கூட கற்க முடியாத நிலை உள்ளது இதன் காரணமாகஇந்தக் குழந்தைகளும் கல்வி அறிவு இன்றி வருங்காலத்தில் கொத்தடிமைகளாகவே தங்களது வாழ்க்கையை ஓட்டும் நிலை உருவாகி வருகிறது.
இது குறித்து வந்த புகாரின் அடிப்படையில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜா கொத்தடிமைகளாக பணிபுரிந்து வரும் தொழிலாளர்களை மீட்கும்,அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அவர்களது குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்து புரட்சி பாரதம் கட்சி சார்பில் பொன்னேரி அம்பேத்கர் சிலையிலிருந்து திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் வரை கவனயீர்ப்பு நடைபயணம் நடை பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்தனர்.
இதற்கு காவல்துறையினர் அனுமதி தர மறுத்ததால் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தைமுற்றுகையிட்டு புரட்சி பாரதம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழகம் முழுவதும் செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாக பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழக அரசு கல்வியை உறுதி செய்ய வேண்டும் அவர்களது எதிர்கால வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்