சென்னை: மேற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.எஸ்.ராஜேஸ்வரி, இ.கா.ப., அவர்கள் தலைமையில், செம்பியம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் திருமண தடை சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. Tmt. S. Rajeshwari IPS, Joint Commissioner of Police (West) conducted awareness camps on Child Protection and Child Marriage Prohibition Act at Government Girls School, Sembium. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்கள் உத்தரவின்பேரில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து, பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் மேற்கு மண்டல இணை ஆணையாளர் திருமதி.எஸ்.ராஜேஸ்வரி, இ.கா.ப., அவர்கள் தலைமையில், சென்னை பெருநகர காவல் சார்பில் புளியந்தோப்பு காவல் துணை ஆணையாளர் திரு.ஐ.ஈஸ்வரன், இ.கா.ப., உதவி ஆணையாளர், ஆண் மற்றும் பெண் காவல் ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று (30.03.2022) காலை, செம்பியம், மாதவரம் நெடுஞ்சாலையிலுள்ள அரசு பெண்கள் பள்ளியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், பெண்கள் பாதுகாப்பு குறித்தும், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்தும், அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் குறித்தும், குழந்தை திருமணத் தடை சட்டம், போக்சோ சட்டம் குறித்தும், அவசர உதவிக்கு காவல் உதவி எண்,100, பெண்கள் உதவி மைய எண்.1091, காவலன் SOS செயலி குறித்தும் காவல் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். செம்பியம் சரக உதவி ஆணையாளர் திரு.செம்பேடு பாபு, செம்பியம் சரக காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.
Related