மதுரை : வாடிப்பட்டி அருகே நீரேத்தான் யூனியன் ஆபீஸ் காலனியை சேர்ந்தவர் முருகன் (47), பழ வியாபாரி. இந்த நிலையில் தாதம்பட்டி ஒட்டன்குளக்கரை கால்நடை மருத்துவமனை அருகில், நடைபாதையில் முருகன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து மதுரை மாவட்ட காவல் சூப்பிரண்டு சிவபிரசாத், உத்தரவின் பேரில் சமயநல்லூர் காவல் துணை சூப்பிரண்டு திரு. பாலசுந்தரம், ஆலோசனையின் பேரில் வாடிப்பட்டி காவல் ஆய்வாளர் திரு. கனகசபாபதி தலைமையில் திரு. முருகேசன், குற்றவியல் உதவி காவல் ஆய்வாளர்கள் திரு. ஆனந்த்குமார், திரு. வெங்கடேஷ், திரு. மணிகண்டன், ஏட்டுகள் திரு. விஜய், திரு. செல்லப்பாண்டி, திரு. கார்த்திக், திரு. தன பாண்டி, உள்ளிட்ட தனிப்படை காவல் துறையினர் , கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 8.30 மணி அளவில் தாதம்பட்டி கண்மாய் புளியந்தோப்பு பகுதியில், பதுங்கி இருந்த 4 பேர் காவல் துறையினரை, பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். உடனே அவர்களை காவல் துறையினர், சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது தாதம்பட்டியை சேர்ந்த சக்திவேல் மகன் வினோத்குமார் (19), ராமசந்திரன் மகன் சூரியபிரகாஷ் (19), மற்றும் (16), வயதுடைய 2 சிறுவர்கள் என்று தெரியவந்தது. மேலும் பழ வியாபாரி முருகனை கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தனர்.
காவல் துறையினர், விசாரணையில் பழ வியாபாரி முருகன் கடந்த 3 நாட்களாக அந்த பகுதிக்கு ஒரு பெண்ணை அழைத்து வந்து பேசி இருக்கிறார். இதை கவனித்த இவர்கள் இது எங்க ஏரியா என கூறி தகராறில், ஈடுபட்டு உள்ளனர். இதில் முருகனுக்கும், 4 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு உள்ளது. அங்கு உடைந்து கிடந்த தடுப்பு கம்பியை எடுத்து முருகனை சரமாரியாக தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேேய பலியாகி இருப்பது தெரிய வந்தது. அதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் காவல் துறையினர், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி