திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (25) ஏற்கனவே திருமணமான இவர் கர்நாடக மாநிலம் பொம்மனஹள்ளியில் வசித்து வந்தார். ஜிம் மாஸ்டர் ஆன இவர் தருமபுரியை சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நரசிம்மனை தருமபுரி போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். போலீசாரிடம் சிக்காமல் இருசக்கர வாகனத்திலேயே சிறுமியை பல்வேறு மாநிலங்களுக்கு அழைத்துச் சென்ற அவர் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்து மாணவியுடன் இருந்துள்ளார்.
இதனால் அந்த மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்தது இந்நிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்து நிரந்தரமாக எங்கும் தங்காமல் நரசிம்மன் பச்சிளம் குழந்தை மற்றும் மாணவியுடன் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் தருமபுரி மாவட்ட போலீசார் கைது செய்து மாணவி மற்றும் பச்சிளம் குழந்தையை போலிசார் மீட்டனர். இதையடுத்து நரசிம்மனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு சி.கலைச்செல்வன்.இ.கா.ப., அவர்கள் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.திவ்யதர்ஷினி.இ.ஆ.ப அவர்கள் உத்தரவுப்படி நரசிம்மன் குண்டர் சட்டத்தின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் வழங்கப்பட்டது.