கோவை : பொள்ளாச்சியை சேர்ந்தவர் கனகு மணி (60), இவர் பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது கடை வழியாக 8-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர் கடை நடந்து செல்வது வழக்கம். சம்பவத்தன்று அந்த வழியாக வந்த மாணவிக்கு கனகு மணி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். தொடர்ந்து பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல் துறையினர், னகு மணியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். பின்னர்காவல் துறையினர், கனகுமணி, மீது போக்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில், அடைத்தனர்.