கோவை : நரசிம்மநாயக்கன்பாளையம், அம்பேத்கர் நகரில் வசிப்பவர் சங்கர். இவரது மகன் முகீசன், (12), நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாரியம்மன் கோவில் வீதி வழியாக வந்த தண்ணீர் லாரி, முகீசன் மீது மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த, முகீசன், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும், வழியில் இறந்தார். பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர், விசாரிக்கின்றனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்