சென்னை : சென்னையை அடுத்த ஆலந்தூர் மடுவின்கரை, பகுதியை சேர்ந்தவர் ஜெனார்த்தனன். இவருடைய மகன் விஷ்வா (16), இவர், ஆலந்தூர் ஆசர்கானாவில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர், பள்ளியில் சிறப்பு வகுப்பு முடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டில் உள்ள அறைக்குள் சென்று, கதவை உள்புறமாக பூட்டிக்கொண்ட விஷ்வா, நீண்ட நேரமாகியும், வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பாட்டி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் , கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, விஷ்வா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை, கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி தகவல் அறிந்துவந்த பரங்கிமலை காவல் துறையினர், தூக்கில் தொங்கிய விஷ்வா உடலை, கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு, அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவன், விஷ்வாவின் தற்கொலைக்கான காரணம் என்ன?. பள்ளியில் தொடர்ந்து சிறப்பு வகுப்புகள், நடந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர், தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தேர்வு பயமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.