கள்ளக்குறிச்சி : பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கடந்த 28.02.2022-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூர் முதல் மணலூர்பேட்டை வரை செல்லும் அரசு பேருந்து மணலூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை ஏற்றிக் கொண்டு வரும்போது பிள்ளையார்பாளையம் அருகே மாணவர்களுக்கும் நடத்துனருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு அப்பேருந்தில் பயணம் செய்த 6 மாணவர்கள் சேர்ந்து பேருந்தின் லைட் மற்றும் சீட்டுகளை சேதபடுத்திவிட்டதாக புகார் பெறப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்கள் விசாரணை செய்த போது இக்குற்றச் செயலில் ஈடுபட்ட அனைவரும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்பதாலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தால் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதாலும் மாணவர்களை எச்சரித்தும் அவர்களின் பெற்றோர்களை அழைத்து அறிவுரை வழங்கவும் உத்தரவிட்டார்.
அதன்படி இன்று 03.03.2022 – ந் தேதி நமது காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சொரையப்பட்டு கிராமத்திற்கு நேரில் சென்று அங்கே படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை நேரில் அழைத்து மாணவர்கள் அறியாமல் செய்த குற்றத்தினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று எடுத்துரைத்தார். பின்பு மாணவர்களுக்கு ஒழுக்கத்தின் அவசியம் குறித்தும், கல்வியின் அவசியம் குறித்தும் அறிவுரை வழங்கினார் அப்போது மாணவர்கள் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவரையை ஏற்று இனிமேல் தாங்கள் எவ்வித குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்றும் ஒழுக்கத்துடன் நன்றாக படிப்போம் என்று உறுதியளித்தனர்.
பின்பு மாணவர்களின் எதிர்கால நலன் கருதி வழக்கு ஏதும் பதியாமலும் சேதமான பேருந்தின் மதிப்பு 1200/- ரூபாயை தனது சொந்த பணத்தை, பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.ஏழுமலை அவர்களிடம் வழங்கினார் காவல்துறையினரின் இந்த மனித நேயத்தை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்