செங்கல்பட்டு : மாமல்லபுரம் அடுத்த பையனுார் பகுதி, வெங்கடேசன் மகன் பன்னீர்செல்வம், (15), இப்பகுதி அரசு உயர்நிலைப் பள்ளி, 10 ம் வகுப்பு மாணவர். நேற்று முன்தினம், பொதுத்தேர்வு எழுதி, நண்பர்களுடன் மாமல்லபுரம் வந்தவர், தனியார் விடுதி அருகில், கடலில் குளித்து மாயமானார். உடன் வந்தவர்கள், பன்னீர்செல்வம் மாயமானது குறித்து, அவரது பெற்றோரிடம் தெரிவிக்க வில்லை. மாணவர் வீடு திரும்பாத நிலையில், நண்பர்களிடம் விசாரித்த குடும்பத்தினர், இது குறித்து அறிந்து தேடினர். நேற்று, சூலேரிக்காடு பகுதி கடற்கரையில் பன்னீர்செல்வம் உடல் ஒதுங்கி, மாமல்லபுரம் காவல் துறையினர், மீட்டனர்.