சென்னை : சென்னை, பள்ளி, கல்லுாரிகள் அருகே, குட்கா, மாவா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை செய்த, 79 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில், பள்ளி, கல்லுாரி அருகே, குட்கா, மாவா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக, காவல் துறையினர், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, ஒரே நாளில், 79 வழக்குகள் பதிவு செய்து, 79 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 16 கிலோ குட்கா, 330 சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.