ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், மதுவிலக்கு வழக்குகளில் 8 நான்கு சக்கர வாகனம், மற்றும் 51 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 59 வாகனங்கள் பறிமுதல், செய்யப்பட்டு உள்ளன. இந்த வாகனங்களுக்கான பொது ஏலம் ஆனைக்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை , மைதானத்தில் வருகிற 28-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் வாகனங்களை, வருகிற 27-ந்தேதி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் பார்வையிடலாம். வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள், இருசக்கர வாகனத்திற்கு, ரூ.2 ஆயிரமும், 4 சக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரமும் 27 மற்றும் 28-ந்தேதிகளில், பொது ஏலம் நடத்தும் இடத்தில் முன் பணம் செலுத்த வேண்டும். முன் பணம் செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில், கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் சரக்கு, மற்றும் சேவை வரி முழுவதையும் , ஏலம் விடும் இடத்தில் செலுத்தி அப்போதே வாகனத்தினை, பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட மதுவிலக்கு, அமலாக்கப்பிரிவு காவல்துணை கண்காணிப்பாளர், அலுவலகத்தினை அணுகலாம்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :