மதுரை : மதுரை போடி அகல ரயில் பாதை பணி நிறைவடைந்த நிலையில், சோதனை ஓட்டமானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பழங்காநத்தம் மாடக்குளம் இணைப்பு ரயில்வே கேட் வழியாக மதுரையில் இருந்து தேனி நோக்கி சோதனை ஓட்ட ரயில் இன்ஜின் வருவதற்காக இருபுறமும் ரயில்வே கேட் அடைக்கப்பட்டது. இந்தநிலையில், ரயில்வே கேட்டில் இருந்து சுமார் 100 மீட்டர், தூரத்தில் பசுமாடு ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றது, இதனை சற்று தூரத்திலேயே கவனித்த ரயில் ஓட்டுனர் வேகத்தை குறைத்து, ஹாரன் சத்தம் கொடுத்தபடியே சென்று கொண்டிருந்தார். எனினும், பசுமாடு தண்டவாளத்தில் நடுவழியில் நின்று கொண்டிருந்தது. உடனடியாக ,அவர் இன்ஜினை நிறுத்தி கீழே இறங்கி பசுமாட்டை விரட்டிய பின்னர், ரயில் புறப்பட்டது. ஓட்டுநரின் சாதுரியத்தால் பசுமாடு ரயிலில் இருந்து அடிப்படாமல் தப்பியது, அனைவராலும் பாராட்டப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி