கோயம்புத்தூர் : கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம்,, சுங்கத்தில் தனியாருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது இந்த மில்லின் ஒரு பகுதியில் திருமணமண்டபம் செயல்பட்டு வருகிறது. அருகில் பர்னிச்சர் கடையும் உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் திடீரென்று மில்லில் தீப்பிடித்தது. இதையடுத்து தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது . இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்புபடையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அதிகாரி அண்ணாதுரை மேற்பார்வையில், நிலைய தீயணைப்பு அதிகாரி புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதற்கிடையில் மில்லின் அருகிலுள்ள மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
மதிய நேரம் என்பதால் அவர்கள் மண்டபத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். தீயின் வேகம் அதிகமாக இருந்தால் மண்டபத்தில் இருந்தவர்களை தீயணைப்பு துறையினர் அங்கிருந்து வெளியே செல்லுமாறு அறிவுரை வழங்கினார்கள். இதையடுத்து திருமணத்துக்கு வந்தவர் கல் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மணமக்களையும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றினர். மில்லில் பிடித்த தீ அருகிலிருந்த பர்னிச்சர் கடைக்கும் பரவியது. மேலும் மில்லில் தொழிலாளர்கள் சமையல் செய்வதற்காக 3 சிலிண்டர்கள் வைத்திருந்தனர். அந்த சிலிண்டர் மீது தீப்பிடித்ததால் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது. இதனால் கட்டிடம் பலத்த சேதமடைந்தது .மதியம் 1 – 30 மணிக்கு எரிய தொடங்கிய தீ இரவு 8 மணிக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது திருமண மண்டபத்தில் இருந்தவர்களை தீயணைப்பு படையினர் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது..மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம்,, சுங்கத்தில் தனியாருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது இந்த மில்லின் ஒரு பகுதியில் திருமணமண்டபம் செயல்பட்டு வருகிறது. அருகில் பர்னிச்சர் கடையும் உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் திடீரென்று மில்லில் தீப்பிடித்தது .இதையடுத்து தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென பரவியது ..இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்புபடையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அதிகாரி அண்ணாதுரை மேற்பார்வையில், நிலைய தீயணைப்பு அதிகாரி புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதற்கிடையில் மில்லின் அருகிலுள்ள மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
மதிய நேரம் என்பதால் அவர்கள் மண்டபத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். தீயின் வேகம் அதிகமாக இருந்தால் மண்டபத்தில் இருந்தவர்களை தீயணைப்பு துறையினர் அங்கிருந்து வெளியே செல்லுமாறு அறிவுரை வழங்கினார்கள். இதையடுத்து திருமணத்துக்கு வந்தவர் கல் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மணமக்களையும் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றினர். மில்லில் பிடித்த தீ அருகிலிருந்த பர்னிச்சர் கடைக்கும் பரவியது. மேலும் மில்லில் தொழிலாளர்கள் சமையல் செய்வதற்காக 3 சிலிண்டர்கள் வைத்திருந்தனர்.
அந்த சிலிண்டர் மீது தீப்பிடித்ததால் பயங்கர சத்தத்துடன் சிலிண்டர் வெடித்தது. இதனால் கட்டிடம் பலத்த சேதமடைந்தது. மதியம் 1 – 30 மணிக்கு எரிய தொடங்கிய தீ இரவு 8 மணிக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது திருமண மண்டபத்தில் இருந்தவர்களை தீயணைப்பு படையினர் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.