திண்டுக்கல் : திண்டுக்கல் செம்பட்டி பகுதியில் , குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து செம்பட்டி காவல்துறையினர், மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராமன் தலைமையிலான குழுவினர் நேற்று செம்பட்டியில், உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடையில் 340 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் கடையின் தரை பகுதியில், சுரங்கம் போன்று அமைத்து, குட்காவை பதுக்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து குட்காவை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடையின் உரிமையாளரான சரவணனை (46), காவல்துறையினர், கைது செய்தனர். இதற்கிடையே குட்கா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் சூப்பிரண்டுதிரு. பாஸ்கரன், சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.