குடியரசுத் தலைவர், பிரதமர் பதக்கம் ஆகியவை ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகியவற்றின்போது மத்திய, மாநில காவல் துறைகள், மத்திய காவல் ஆயுதப் படைகள், துணை ராணுவப் படைகள் உள்ளிட்டவைகளில் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும்.
அந்த வகையில், அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் காவல்துறைகள், மத்திய காவல் படைகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் 777 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்படவுள்ளது.
இது தொடர்பான பதக்கம் பெறுவோரின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த காவல் துறையினர்கள் விபரம்
1. யு.மாணிக்கவேல் (அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆப் போலீஸ் -திருச்சி).
2. என்.குமார் (அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆப் போலீஸ்- திருவொற்றியூர்)
3.பி.லோகநாதன் (டிஎஸ்பி-சென்னை)
4.சி.பாரதி (டிஎஸ்பி-சென்னை)
5.பி.கண்ணன் ( டிஎஸ்பி-கிருஷ்ணகிரி)
6.வி.எழிலரசு (டிஎஸ்பி-விழுப்புரம்)
7.கே.என்.சுதர்சன் (இன்ஸ்பெக்டர்-சென்னை)
8.ஜே.விஜய் ஆனந்த் ( இன்ஸ்பெக்டர்-சென்னை)
9. என். பிரேமானந்தன் (இன்ஸ்பெக்டர்-கோயமுத்தூர்)
1௦. ஆர். ரகுபதி ( இன்ஸ்பெக்டர்- தூத்துக்குடி)
11. எம்.அருள்தாஸ் (இன்ஸ்பெக்டர் -சென்னை)
12. எம்.ரவிச்சந்தர் (இன்ஸ்பெக்டர்-கோயமுத்தூர்)
13.ஆர்.தேவக்குமார் ( இன்ஸ்பெக்டர்- சென்னை)
14. ஏ.ராஜா ( சப்-இன்ஸ்பெக்டர்- சேலம்)
15. எஸ்.ரத்தினம் (சப்-இன்ஸ்பெக்டர்-தஞ்சாவூர்)
16.ஜே.கோபிநாத் (சப்-இன்ஸ்பெக்டர்- சென்னை)
17. ஜி.கலைவாணன் ( சப்-இன்ஸ்பெக்டர்- திருநெல்வேலி)
18.என்.கங்காதரன் ( சப்-இன்ஸ்பெக்டர்- சென்னை)
19.எஸ். ரெத்தினசாமி ( சப்-இன்ஸ்பெக்டர்- தஞ்சாவூர்)
20.ஈ.கெங்கண்ணா (சப்-இன்ஸ்பெக்டர்-சென்னை).
இந்த பதக்கங்கள் தமிழக காவல் துறைக்கு முறைப்படி மத்திய உள்துறை அனுப்பி வைக்கும். தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழா, காவல்துறை அணிவகுப்பு நிகழ்ச்சிகள் போன்றவற்றின் போது சம்பந்தப்பட்ட காவலர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு குடியரசுத் தலைவரின் பதக்கம் வழங்கப்படும்.
நமது செய்தியாளர்
குடந்தை .ப.சரவணன்