திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. தே. ஜான்சன் அலெக்ஸ் அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. க. மணிகண்டன் அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
தேனி மாவட்டம், காவல் தொலைத் தொடர்பு பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ஏ. தர்மர் அவர்கள் மாரடைப்பால் காலமானார்.
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. வ. பார்த்திபன் அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
சேலம் மாநகரம், வீராணம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ஹ. காமராஜ் அவர்கள் மாரடைப்பால் காலமானார்.
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. நு. ஜெய் சங்கர் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார்.
திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ஞ. வனராஜ் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ஊ. தனபால் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார்.
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ளு. முருகன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார்.
மதுரை மாநகரம், கூடல்புதூர் காவல் நிலையத்தில் முதல்நிலை பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த திருமதி கூ. பாண்டிமாதேவி அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார்.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ஆ. செல்லபாண்டி அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. சு. சந்திரகாந்த் அவர்கள் மாரடைப்பால் காலமானார்.
ஈரோடு மாவட்டம், வரப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. மு. சாலமன் அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ழு. சேகர் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ஊ. முருகேசபாண்டி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார்.
காஞ்சிபுரம் மாவட்டம், நகர காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. சு. கஜேந்திரன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார்.
நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ஏ. சுந்தரம் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. சதீஷ்வரன் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார்.
சென்னை பெருநகரக் காவல், ஆயுதப்படை-1, ‘ஈ’ நிறுமம், 23-ம் அணியில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ஏ. ஆனந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார்.
மேற்கண்ட பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் நிர்வாகம் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றது.
இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட 19 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.