விருதுநகர் மாவட்டம், கூமாபட்டி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. ஏ. ராஜா அவர்கள் 17.6.2017 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நெஞ்சு வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காலமானார்.
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆடீநுவாளராகப் பணிபுரிந்து வந்த திரு. அழகுராஜா அவர்கள் 17.06.2017 அன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், கண்டோன்மென்ட் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த திரு. ஏ. கரிகாலன் அவர்கள் 20.05.2017 அன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம், காவலூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வந்த திரு. பார்த்தீபன் அவர்கள் 19.05.2017 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.
சென்னை மாவட்டம், கிண்டி வட்டம், தி. நகர் பகுதியைச் சேர்ந்த திரு. வி. நெப்போலியன் என்பவர் 16.06.2017 அன்று மின்மாற்றி அருகில் உள்ள மின்விளக்கு கம்பத்தை தொட்டபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்கவரப்பட்டு மதுரா அரிசிகவுண்டன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. இ. அண்ணாமலை என்பவர் 16.06.2017 அன்று அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சிலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. க. ராஜபாண்டி என்பவர் 05.06.2017 அன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை சரகம், கணபதி அக்ரஹாரம்-2 கிராமம், வடக்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்த திரு. சங்கரன் என்பவர் 15.06.2017 அன்று அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், குரும்பர் தெருவைச் சேர்ந்த திரு. கு. செல்வராஜ் என்பவர் 20.05.2017 அன்று மின்சார கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி வட்டம், திரிபாலம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி. ரமணி என்பவர் 21.05.2017 அன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டம், அனுப்பர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த திரு. சுலைமான் என்பவரின் மகன் செல்வன் சல்மான், மகள் செல்வி பானுமா, ஆகியோர் 07.06.2017 அன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்கள்.
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், கீடிநமுட்டுகூர் மதுரா கெங்கசாணிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த திரு. சு. சுபாஷ் என்பவர் 07.06.2017 அன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், மகேந்திரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த செல்வன். ராக்கேஷ் என்பவர் 12.07.2017 அன்று மின்கம்ப தாங்கு கம்பியை பிடித்து விளையாடி கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம், திரு. க. சின்னசாமி என்பவர் 18.05.2017 அன்று மின்சார கம்பத்தில் பழுது பார்த்துக்கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. மு. முத்து முருகன் என்பவர் 23.06.2017 அன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
மேற்கண்ட நிகழ்வுகளில் உயிரிழந்த காவலர்கள் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட பதினாறு நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாடீநு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.பழனிசாமி உத்தரவு இட்டுள்ளார்.
உயிரிழந்த காவலர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்.