தமிழக காவலில் பணியின் போது இறந்தவர்களின், வாரிசுகளுக்கு, அரசின் பிற துறைகளில், பணி ஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற் கொள்ளுமாறு, காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்களுக்கு, டி.ஜி.பி., திரு.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவலின், நான்கு மண்டலங்கள், 12 சரகங்கள், 32 கண்காணிப்பாளர்கள், ஆறு ஆணையர்கள், சிறப்பு பிரிவுகளில் பணியின் போது இறந்தவர்களின் வாரிசுதாரர்கள், காவலில் பணி ஒதுக்க கோரி விண்ணப்பித்து காத்து இருக்கின்றனர்.
இது குறித்து, டி.ஜி.பி., திரு.ராஜேந்திரன், அனைத்து மாவட்ட, கண்காணிப்பாளர்கள், ஆணையர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். காவலில் ஆண்டு தோறும், 300 முதல், 400 பேர் பணியில் உள்ள போது மரணத்தை சந்திக்கின்றனர்.
அவர்களின் வாரிசுதாரர்களுக்கு, ஆண்டு தோறும் பணி ஒதுக்க முடியாததால், பணிக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை, கடந்த, ஜன.,31 நிலவரப்படி, 3,076 ஆக உயர்ந்துள்ளது.இவர்களின் குடும்பத்தின் நலன் கருதி, மாவட்ட எஸ்.பி.,க்கள், மாநகர காவல் ஆணையர்கள், இவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள, அரசுத்துறை தலைவர்கள், பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு, அந்த துறைகளில், கருணை அடிப்படையில் உள்ள காலிப்பணியிடங்களில், காவலின் வாரிசுதாரர்களில் காத்திருப்பவர்களுக்கு பணி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக, மாவட்ட கலெக்டர்களை, கண்காணிப்பாளர்கள், ஆணையர்கள் நேரில் சந்தித்து, காலிப் பணியிடங்களில், காவலின் வாரிசுகளுக்கு பணி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.
சென்னைக்கு முதலிடம் காவலின் வாரிசு வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கையில், சென்னையில், 676 பேர் உள்ளதால், தமிழக அளவில் முதலிடத்தையும், மதுரை, 214, மதுரை மாநகரம், 4 பேர், என மொத்தம், 218 பேருடன் இரண்டாமிடத்தையும், திருநெல்வேலி, 147 பேர், மூன்றாமிடத்தையும், திருச்சி, 144 பேர் நான்காமிடத்தையும் பெற்றுள்ளன. சேலம்,93 பேர், சேலம் மாநகரம், 4 பேர், ஈரோடு,69 பேர், நாமக்கல்,20 பேர், தர்மபுரி,50 பேர், கிருஷ்ணகிரி,43 பேர் வேலைக்காக மனு அளித்து விட்டு காத்திருக்கின்றனர்.
காத்திருப்போர் விபரம் :