தென்காசி : கிரெடிட் கார்டு உதவி மையம் போல் பேசி OTP மூலம் திருடிய பணம் சைபர் கிரைம் காவல்துறையின் உதவியுடன் மீட்பு தென்காசி மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் கிரெடிட் கார்டு மூலம் பணப் பரிவர்த்தனை செய்ததில் சந்தேகம் ஏற்பட்டதால் உதவி மையத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டி Google ல் தேடிப் பார்த்து 9330255019 என்ற தவறான உதவி மையத்தை தொடர்பு கொண்டதில் அவர்கள் கிரெடிட் கார்டு உதவி மையம் போலவே பேசி உங்கள் செல்போன் எண்ணிற்கு வரும் OTP கூறுங்கள் என்று கூறி அவரது கிரெடிட் கார்டு மூலமாக 29,900 பணப் பரிவர்த்தனை செய்து மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து பரமேஸ்வரன் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுவாமிநாதன் அவர்களின் தலைமையில் IUCAW காவல் ஆய்வாளர் திருமதி. அன்னலட்சுமி(பொறுப்பு),உதவி ஆய்வாளர் (தொழில்நுட்ப பிரிவு) திருமதி.செண்பக பிரியா ஆகியோர் விசாரணை மேற்கொண்டதில் கிரெடிட் கார்டை Flip kart ல் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்திருப்பது தெரியவந்து,சைபர் கிரைம் மூலமாக உடனடியாக பணம் மீட்கப்பட்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுவாமிநாதன் அவர்களின் முன்னிலையில் மேற்படி நபருக்கு உரிய அறிவுரைகள் வழங்கி அவரது பணம் ஒப்படைக்கப்பட்டது..